ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
நாம் ஆதார் கார்டில் உள்ள புகைப்படங்கள் யாருக்கும் காட்டாமல் மறைத்தே வைத்திருப்போம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்காகவே தற்போது ஆதார் கார்டில் உள்ள புகைப்படங்களை மாற்றிக்கொள்ள படியான வசதியானது வழங்கப்பட்டுள்ளது. மேலும் கீழ்க்கண்ட கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை அறிந்து அதன்படி புகைப்படத்தை மாற்றிக்கொள்ளவும்.
ஆதார் புகைப்படம்:
நாம் ஒவ்வொருவரும் இந்திய குடிமகன் என்பதற்கான ஒரு சான்று ஆதார் அட்டை தான். எனவே இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்டுள்ள இந்த ஆதார் கார்டானது பெயர், முகவரி, தங்களின் மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் இணைப்பு இடம்பெற்றுள்ளது. இதனால் அரசாங்கத்தின் அனைத்து அத்தனை மானியங்கள் மற்றும் திட்டங்களைப் பெற ஆதார் கார்டானது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. எனவே உங்கள் ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரியில் ஏதேனும் சில தவறுகள் இருந்தால் UIDAIஐ அணுகி UIDAI-ன் உதவிகளுடன் புதுப்பித்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
உங்களது ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்ற வேண்டுமா?
தற்போது ஆதார் கார்டில் உள்ள உங்களது புகைப்படத்தினையும் மாற்றி கொள்ளும்படியான சில வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதாவது உங்களின்ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும்போது அந்த ஒரு கூட்டத்தில் சிக்கி தவிதவித்து வியர்வை வழிய வழிய புகைப்படம் எடுத்திருப்போம். இது பலருக்கும் இந்தபுகைப்படம்எடுத்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும். மேலும் பெரும்பாலானோர் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மற்றவர்களுக்கு காட்ட தயங்குவார்கள். ஆனால் இப்போது இதற்காகவே ஆதார்கார்டில் தங்களது புகைப்படத்தை மாற்றிக்கொள்ளும்படியான வசதி வழங்கப்பட்டுள்ளதாம்.
எப்படி புகைப்படத்தை மாற்றுவது?
ஆமாம் இதெல்லாம் சரி எப்படி ஆதார்கார்டில் புகைப்படத்தை மாற்றலாம் என்பதை நாம் இப்போது பார்ப்போம். முதலில் உங்களது மொபைலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்கிற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் (download) செய்யவும். பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து ஆதார் பதிவு மையத்திற்கு சென்று படிவத்தை அவர்களிடம் ஒப்படைக்கவும். இதற்கு மொத்த கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.100 கேட்பார்கள் அதை நாம் செலுத்த வேண்டும். இதன் பின்பு அங்கு ஒப்புகை சீட்டு மற்றும் அதன் புதுப்பிப்பு கோரிக்கை எண் என கொடுக்கப்படும். அந்த எண்ணை வைத்து ஆதார் அட்டையின் புதுப்பிப்பு நிலையை நாம் கவனித்துக் கொள்ள முடியும். இந்த புதுப்பிக்க கிட்டதட்ட 90 நாட்கள் வரை ஆகலாம். எனவே புதிய போட்டோ ஒன்கறை இணைக்க புகைப்படமானது எடுக்க அது சார்ந்த ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.