சமீப காலங்களில் chat gpt, ஆர்டிபிசியல் இன்டெலஜன்ஸ் போன்ற வார்த்தைகளை பரவலாக கேள்வி படாமல் இருக்க முடியாது.
காதலுக்கும் உதவும் Chat Gpt
ஆர்டிபிசியல் இன்டெலஜன்ஸ் என்று அழைக்கப்படும் மெய்நிகர் நுண்ணறிவு தொழில்நுட்பம் டிஜிடல் உலகில் பல்வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் எம். ஸி. ஸி. நிறுவனம் நடத்திய ஆய்வில் அறுபத்தி இரண்டு சதவீதம் இந்தியர்கள் காதல் கடிதம் எழுத தொழில்நுட்பமான chat gpt யின் உதவியை நாடுவதாக தெரிய வந்துள்ளது. காவலை சொல்ல chat gpt ஐ பயன்படுத்தியதில் ஆண்களே அதிகம். மேலும் chat gpt தொழில்நுட்பத்தின் மூலம் எழுதப்பட்ட காதல் கடிதத்தை மனிதனால் எழுதப்பட்டதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என எழுபத்தி எட்டு சதவீதம் இந்தியர்களால் கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.