என் மகனுக்கு கூட இத நான் பண்ணல உனக்காக சொல்றேன்.! சிவாஜி கணேசன் கூறிய 3 ரகசியம் இதோ..
தமிழ் சினிமாவில் உள்ள , ஏன் இந்திய சினிமாவிலேயே நடிப்புக்கே சிறந்த உதாரணமாக கூறும் நடிகர் ஒரு சிலர் என்றால், அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிக முக்கியமானவர் இல்லை நம்பர் 1 எனவே கூறலாம். அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலமும், நல்ல குணத்தின் மூலமும் உயர்ந்து நிற்கிறார் நடிகர் சிவாஜி கணேசன்.
தமிழ் சினிமாவில் வழக்கமாக இருக்கும் நடைமுறை , அதாவது தந்தை மிகப் பெரிய ஹீரோவாக இருந்தாலும் மகனும் கிட்டத்தட்ட ஹீரோவாகவே களம் இறங்குவார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படித்தான் சிவாஜியின் மகன் பிரபுவும் ஹீரோவாக களம் இறங்கினாராம். நல்ல வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளார் சிவாஜி கணேசன் மகன் பிரபு.
அண்மையில் சிவாஜிகணேசன் பற்றி நடிகரும் இயக்குனரும் ஆன தியாகராஜன் மற்றும் அவரது மகன் நடிகர் பிரசாந்த் ஆகியோர் ஒரு பேட்டியில் பெருமையாக பேசி உள்ளனராம்.
தியுலகிற்கு நடிக்க வந்த பிறகு தியாகராஜனுக்கு பிரசாந்த் என்று ஒரு மகன் இருப்பது நிறைய பேருக்கு தெரியாதாம். ஒருநாள் இதனை எதார்த்தமாக தெரிந்துகொண்ட நடிகர் சிவாஜிகணேசன் தியாகராஜனுக்கு போன் செய்து உன் மகனை என் வீட்டுக்கு கூட்டிட்டு வா தியாகராஜன் என்று கூறியுள்ளார்.
அப்போது தியாகராஜன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் சிவாஜி வீட்டிற்கு சென்றார்களாம். அப்போதுதான் சிவாஜி கணேசன் பிரசாந்தற்க்கு சில அறிவுரைகளைக் கூறி உள்ளாராம்
அதாவது சிவாஜி பிராசாந்திடம் , ‘ பிரசாந்த் நான் உனக்கு 3 அறிவுரைகளை கூறுகிறேன். முதலில் ஷூட்டிங் குறித்த நேரத்திற்கு முன்னரே படப்பிடிப்பு (action) தளத்திற்கு சென்று விடவேண்டும். மேக்கப்புடன் எப்போதும் இருக்க வேண்டும். அடுத்தது இயக்குனர்கள் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே நடித்து விட வேண்டும் என்றார். ஏனென்றால் அந்த கதைக்கு அவர் ( இயக்குனர்) பல மாதங்கள் சிந்தித்து அதனை படமாக்கி கொண்டிருப்பார். அதில் நமது யோசனைகளை புகுத்த கூடாது பிரசாந்த். மூன்றாவதாக,எக்காரணம் கொண்டும் உடன் நடிக்கும் நடிகைகளுடன் சூட்டிங் முடிந்த பிறகு பழக்கம் வைத்து கொள்ளக்கூடாது.’ என பிரசாந்திடம் சிவாஜி கணேசன் கூறியுள்ளார்.
இது குறித்து இந்த மூன்று அறிவுரைகளை எனது மகன்களுக்கு கூட நான் கூறியது இல்லை. உனக்காக நான் சொல்கிறேன். அதனை கேட்டு நடந்து கொள். என அன்பாக கட்டளையிட்டுள்ளார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதனை அப்படியே பிரசாந்தும் பின்பற்றி அடுத்தடுத்த படங்களில் கடைபிடித்து நல்ல நடிகராக வளர்ந்து விட்டார். இது போன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள்.
Aⲣpreciate this post. Let me try it out.