“வருகிறது 3ம் உலகப்போர்” நான் தயார், நீ தயாரா..?
தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து உக்ரைனில் உள்ள நகரங்களிலும் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷிய ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்களாம்
உக்ரைன் ராணுவத்தினரின் செயல்ப்பாட்டை தடுக்கும் வகையில் ரஷியாவின் தாக்குதல்கள் இருந்ததாம். பின்னர் அரசு கட்டிடங்கள், குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு இடையே உக்ரைனின் ராணுவத்தினர்கள் கடுமையான சவாலை அளித்து வருவதால் ரஷியா மீண்டும் உக்ரைனின் ராணுவ தளங்கள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு உக்ரைனில் உள்ள துறைமுக நகரமான மரியுபோலில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல் சில நாட்களாக மிகவும் கடுமையாக இருந்து வருகிறதாம். அந்நகரம் மீது தொடர்ந்து ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மரியுபோல் நகரம் மிகவும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அங்கு உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் மரியுபோல் நகருக்குள் ரஷியாவின் பெரும் படைகள் நுழைந்து விட்டானர்.
அந்நகரத்தின் பெரும்பாலான தெருக்களில் ரஷிய பீரங்கிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் ரஷிய படைக்கும் உக்ரைன் வீரர்களுக்கும் இடையே மரியுபோல் தெருக்களில் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறதாம் அங்கு உள்ள எக்கு ஆலையில் இரு ராணுவத்தினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறதாம். மரியுபோல் நகருக்குள் ரஷிய படைகள் நுழைந்து இருப்பதால் உக்ரைன் அங்கு சண்டை தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் உலகப்போர் :
உக்ரைன் ரஷ்யா யுத்தத்தால் இதனால் அங்கு சிக்கி உள்ள மக்கள் பெரும் பீதியுடன் இருக்கின்றனர். இதற்கிடையே மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் மக்களை ரஷிய படை தடுத்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொண்டு செல்வதையும் தடுக்கிறார்கள் என்று உக்ரைன் சார்பில் குற்றம்சாட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் கீவ்வுக்குள் நுழைய முயற்சித்தும் ரஷிய படைகளை உக்ரைன் ராணுவத்தினர் தடுத்து வருகிறார்கள். இது போன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள்.