சென்னை வியாசர்பாடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் மகன் பணத்தை இழந்ததால் தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் சூதாட்டத்தின் கோரதாண்டவம்
வியாசர்பாடியை சேர்ந்த கண்ணன் செல்வி தம்பதியருக்கு தேவேந்திரன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தேவேந்திரன் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் கம்பனி யில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது கம்பேனி பணத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு மூன்று லட்சம் ரூபாயை அவர் இழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கம்பனி நிர்வாகம் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஒரு வாரத்திற்குள் பணத்தை கட்டுவதாக தேவேந்திரன் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேவேந்திரன் பணத்தை கட்ட முடியாமல் தலைமறைவானார் . அதனால் அந்த கம்பெனி டார்ச்சர் செய்ய , மகன் தலைமறைவானதால் தாய் செல்வி விரக்தியில் மன்னனை ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.