சீனாவின் போதைப்பொருட்களை மோப்பம் பிடிக்க அணில்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதெப்படி அணில்களை வைத்து?
சீனாவின் தென் மேற்கு நகரமான சோங்கில் உள்ள சிறப்பு காவல் துறையினர், போதைப்பொருட்களை மோப்பம் பிடிக்க அணில்களுக்கு சிறப்பு இராணுவப் பயிற்சியை வழங்கி வருகின்றனர். இதற்காக ஆறு சிவப்பு அணில்களின் குழுவை அவர்கள் உயர் அடுக்கு போதைப்பொருள் பிரிவில் வைத்து இருப்பதாகவும், செயல்பாட்டாளர்கள் பஞ்சு போன்ற சுவடுகளை பயன்படுத்தி கிடங்குகள் மற்றும் சேமிப்பு அளவுகளில் உள்ள மிக சிறிய இடங்களிலிருக்கும் போதைப்பொருட்களை அணில்கள் மூலம் கண்டறிய பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த அணில்கள் சுறுசுறுப்பாகவும் சிறியதாகவும் இருப்பதால், மோப்பநாய்கள் செல்ல முடியாத இடங்களுக்கு கூட இந்த அணில்களாள் நுழைய முடியும் என்றும், இந்த அணில்கள் கிடங்குகள் மற்றும் சேமிப்பு அலகுகளில் உள்ள சிறிய இடைவெளிகளில் தேடும் திறன் கொண்டவை என்றும் சோங்கிங் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.