வெளிவந்தது சிவகார்த்திகேயனின் கதை
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நேரடியாக தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தன் முத்திரையை பதிக்க இருக்கிறார் என கூறப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் உருவாகும் அவருடைய 20வது திரைப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்குகிறாராம் . தமன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார் என கூறப்பட்டு உள்ளது
கடந்த மாதம் (February) பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்காலில் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது
என்னது பிரேம்ஜி வில்லனா?
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் கதை என்ன என்பது பற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளதாக தகவல்கள் குவிந்துள்ளன . அதில் அதாவது இந்தப் படத்தில் நடிகர் பிரேம்ஜி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதில் பிரேம்ஜி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை பற்றி கேள்விப்பட்ட அனைவரும் தற்போது பிரேம்ஜியை பயங்கரமாக கலாய்த்து வருகின்றார்கள். ஏனென்றால் இதுவரை நாம் அவரை திரைப்படங்களில் ஒரு காமெடியனாக தான் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்போது அவர் வில்லனாக நடிக்க உள்ளார்.. அப்படிப்பட்ட அவர் திடீரென வில்லன் அவதாரம் எடுத்து இருப்பது பல பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் போன்ற நடிகருக்கு இவர் வில்லனா என்று கேட்டு பலரும் கலாய்கின்றனர். மேலும் பிரேம்ஜி வில்லனாக நடிப்பதைப் பார்த்து அவரது அண்ணன் வெங்கட்பிரபு முதல் அவருடைய நண்பர்கள் வரை அனைவரும் இப்போது மிகுந்த ஆச்சரியத்தில் தான் இருக்கிறார்கள்
மேலும் பிரேம்ஜி இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய நண்பராக வருவார். கடைசியில்தான் பிரேம்ஜி தனக்கு துரோகம் செய்கிறார் என்று சிவகார்த்திகேயனிற்கு தெரியவரும். அதன்பிறகு பிரேம்ஜி தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை காட்டுவார் பின்னர் நடப்பது தான் மீதி கதையாம்.
இதுதான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரியாம். இதை வைத்துப் பார்க்கும்போது அந்த வெளிநாட்டு ஹீரோயினை தான் இருவரும் காதலிப்பார்கள் என்று தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும் படம் வெளிவந்த பிறகு பிரேம்ஜியின் வில்லத்தனம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து விடும். எனவே இது போன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள்.