விஜய் மகனின்‌ புதிய வீடியோ வைரல் என்னனு தெரியுமா?

விஜய் 
தற்போதைய நாட்களில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் அரசியலுக்கு வந்த பின் தற்போது தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடித்து வருகிறார். இயக்குனர் ஹெச். வினோத் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த இப்படம், அடுத்த ஆண்டு 2025 அக்டோபர் மாதத்தில் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் விஜய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவருடைய முதல் படத்தினை லைகா நிறுவனமானது தயாரிக்கிறது. ஆனால், இதுவரையிலும் இப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்பதனை பற்றி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

கோட் சூட்டில் சஞ்சய்

அதேபோல் தந்தையை போல் நடிகராக தமிழ் சினிமா துறையில் என்ட்ரி கொடுக்காமல், தனது தாத்தாவை போல் ( எஸ் ஏ சந்திரசேகர் ) இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். விஜய்யின் மகன் சஞ்சய் கோட் சூட்டில் செம ஸ்டைலிஷாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில், தளபதி விஜய் எப்படி கோட் சூட்டில் வந்தாரோ, அதே போல் சஞ்சய் இருக்கிறார். 

Leave a Reply