தல அஜித்தின் அடுத்தடுத்த திரைப்படங்கள்
தமிழ் சினிமாவின் மிகவும் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் (ajith) நடிப்பில் வலிமை திரைப்படமானது கடந்த மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்குமார் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம் அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
பொதுவாகவே தற்போதைய காலத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசைக்கு எல்லோரும் அடிமையாகும்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே AK62 படம் குறித்த அப்டேட் பரவி வருகிறது, அதன்படி லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ்( lyca production) தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும், அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகின்றது.
AK 62 அப்டேட்
இன்னும் AK 61 படம் கூட தொடங்காத நிலையில் AK 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே இன்றும் அப்படத்தின் அறிவிப்பு வரும் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் அஜித்தின் வேற மாறி பாடல் வரியை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளாராம்.
இதை கண்ட ரசிகர்கள் இன்று கண்டிப்பாக அப்டேட் இருக்கும் என கூறிவருகின்றனர். எனவே நாமும் அப்டேட்ஸ் தெரிவறும் பட்சத்தில் நமது பக்கத்தில் பதிவு செய்கிறோம்.