அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் சீன உளவு பலூன் சுற்றப்பட்ட நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் சீனா உளவு பலூனை அனுப்பி கண்காணித்து உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மௌலானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத ஏவு தளத்தின் மேல் சீன உணவு பலூன் ஒன்று பரந்த நிலையில் அதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

எந்தெந்த நாட்டில் பறந்தது உளவு பலூன்
அட்லாண்டிக் கடலில் விழுந்த பலூனின் பாகங்களை இராணுவ வீரர்கள் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதை உளவு பலூன் இல்லை என்றும், வானிலையை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட ஆகாயக் கப்பல் வகைதான் எனவும் சீனா தெரிவித்திருந்த நிலையில், அது சுட்டு வீழ்த்தப்பட்ட தால் சீனா கடும் ஆத்திரம் அடைந்தது. இதனிடையே, அமெரிக்கா மட்டுமல்லாது சீன விமானப்படை யால் இயக்கப்படும் இந்த உளவு பலுன்கள் ஆனது இதுவரை ஐந்து கண்டங்களை கடந்து உள்ளதாகவும், இந்தியா, ஜப்பான், வியட்நாம், தயவா, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளை உளவு பார்த்து உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.