TNUSRB 444 உதவி ஆய்வாளர் (SI) பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள்!
தமிழகத்தை பொறுத்தவரை காவல் துறைகளில் உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNUSRB தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பதவிற்கான தகுதிகளும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளதாம்
444 உதவி ஆய்வாளர் (SI) காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக எந்த ஒரு போட்டித் தேர்வுகளானதும் கடந்த 2 வருடங்களாக நடக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதனால் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் வருடக்கணக்கில் அரசு தேர்வுகளுக்காக தயாராகி வருபவர்கள் தேர்வர்கள் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்து வந்தனர். ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்திருக்கும் காரணத்தால் தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மேலும் அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. மேலும் தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சார்ந்த சேவைகளுக்கான பணியாளர்களை அரசானது தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(TNUSRB) செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள 444 காவல் சார்ந்த உதவி ஆய்வாளர் பணியிடங்களானது நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் இதற்கான அறிவிப்பு கடந்த 8ம் தேதி வெளியாகி உள்ளது. தற்போது இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்க வரும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை கால அவகாசமானது கொடுக்கப்பட்டுள்ளது என்பது தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவிகளுக்கான விண்ணப்பிக்க விண்ணப்பதாரர், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்கு ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்களும், காவல்துறையில் தற்போது பணியாற்றுபவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கு இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூபாய்.500 வரை வசூலிக்கப்படுகிறதாம்
தமிழகத்தில் இத்தேர்வில் மக்கள் முதன்முறையாக தமிழ் மொழித்தகுதித் தேர்வுகளைஅரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி நடத்த உள்ளது என கூறப்படுகிறது. எனவே இந்த தேர்வுக்காக தேர்வு வாரியங்களில் கட்டுப்பாட்டு அறையிலுள்ள உதவி மையம் அமைக்கப்படுகிறதாம். மேலும் இதுபோன்ற பல உதவி மையங்களுமீ, மாநிலம் முழுவதிலுள்ள உள்ள மாநகர காவல் ஆணையர்கள் அலுவலகங்களிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கழ் அலுவலகங்களிலும் தற்போது பணி நேரத்தில் செயல்படும் என கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற விபரங்கள் இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக ஏதேனும் தங்களின் சந்தேகங்கள் கேட்பதற்கு விண்ணப்பதாரர்கள் “உதவி மையத்தை” பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. மேலும் 044-40016200, 044-28413658 போன்ற தொலைப்பேசி எண்கள், 94990 08445 என்ற கைபேசி எண்கள் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் மொபைலில் உதவி மையத்தை தொடர்புக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள்.