பிரமாண்டத்தின் உச்சியில் RRR
சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் மிகச்சிறந்த முன்னணி நட்சத்திரங்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் RRR படமாகும்.
இந்த படமானது மிக பெரிய பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. மேலும் RRR திரைப்படம் இம்மாதம் 25 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியானது.
RRR படத்தின் உலகளவில் வசூல் மழை
இப்படமானது வெளியானது முதல் அனைவரிடமிருந்து மிகச் சிறந்த விமர்சனங்களையும் அதன் ரசிகர்களிடம் பேராதரவையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு அதன்படி பாகுபலி படத்தினை விட இந்த படமானது மிக பெரிய வசூலில் சாதனைகளை கண்டிப்பாக நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே நச்சடி கொடுக்கும் வகையில் இதனிடையே தற்போது இந்த படமானது வெளியாகி இரண்டு நாட்களே கடந்த நிலையில் இந்த படத்தின் வசூலின் குறித்த நிலவரங்கள் வெளியாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த படமானது உலகம் முழுவதும் 2 நாட்களில் இந்திய மதிப்பின் படி ரூ.340+ கோடி வசூலை குவித்துள்ளது என கூறப்படுகிறது, மேலும் இதன்முலம் வலிமை, சர்கார் போன்ற தமிழ் படங்களின் ஒட்டுமொத்த வசூலையும் வெறும் 2 நாட்களில் RRR திரைப்படமானது முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.